பழநி: தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாக திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சிலையை பக்தர்கள் ஆர்வ மிகுதியில் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் வரும் அக். 1ம் தேதி முதல் பழநி மலைக்கோயிலில் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் கோயிலுக்கு மறதியாக கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை வின்ச், ரோப்கார் மற்றும் படிப்பாதைகளில் உள்ள கோயில் சேகரிப்பு மையத்தில் ரூ.5 கட்டணம் செலுத்தி வைத்துவிட்டு தரிசனம் முடித்து பெற்றுக் கொள்ளலாமென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.