பழனி: பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்-ல் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன.