திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் காலை 10மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியை முன்னிட்டு கோதை ஈஸ்வரர் கோயிலில் வில் அம்பு போடும் நிகழ்வு நடைபெறுவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு நாளை காலை மீண்டும் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.