திண்டுக்கல்: பழனி CBSE பள்ளியில் கீழேவிழுந்த 6ம் வகுப்பு மாணவன் கோமா நிலைக்குச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தது குறித்து ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 8ம் தேதி பள்ளியில் கீழே விழுந்த மாணவன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.