Monday, February 26, 2024
Home » பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி

by MuthuKumar

மதுரை: பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளும் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளார்.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் மலைக்கோயிலின் அடிவாரத்தில் கிரிவலப்பாதை உள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கிரிவலப்பாதை மற்றும் கடை வீதிகளில் நிரந்தர கட்டுமானங்கள் மற்றும் தற்காலிக கட்டுமானங்கள் உள்ளன. இதன் காரணமாக பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை அடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒய்வு பெற்ற நீதிபடி பாரதிதாசன் தலைமையிலான குழு ஆக்கிரமிப்பு தொடர்பான அறிக்கையை தக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நீதிமன்ற உத்தரவுபடி தற்காலிக ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றபட்டு விட்டது. பழனிக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்கபட்டுள்ளது என தெரிவிக்கபட்டது.

இதனை அடுத்து பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. இனி வரும் காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளும் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழனி கோயில் கிரிவல பாதையில் வாகனங்கள் வராமல் இருக்க பிராதான சாலையை இணைக்கும் இணைப்பில் தடுப்புகளை அமைத்து தடுக்க வேண்டும். பழனி கோயில் கிரிவல் பாதையில் உள்ள நிரந்தர கட்டுமன ஆக்கிரமிப்புகளை அகற்றி இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என பழனி நகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

5 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi