பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி சீதாராம்குன்று- போப்சன் சாலையில் தலையில் காயத்துடன் சிறுத்தை ஒன்று படுத்து கிடந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற ஜீப் டிரைவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கொல்லங்கோடு ரேஞ்சு பாரஸ்ட் அதிகாரி பிரமோத் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், மண்ணுத்தி கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடந்து தலையில் அடிபட்ட நிலையில் காயத்துடன் படுத்து கிடந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தலையில் காயத்துடன் படுத்து கிடந்த 4 வயது ஆண் சிறுத்தைக்கு அளிக்க முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தது. வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட மோதில் சிறுத்தை காயமடைந்திருக்கலாம். இருப்பினும் உடற்கூறு பரிசோதனைக்கு பின் சிறுத்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.