பாலக்காடு : பாலக்காடு, புதுநகரம் ஆகிய மீன் மார்க்கெட்களில் உணவு பாதுக்காப்பு துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 95 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்காடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையும், நகராட்சி சுகாதாரத்துறையும் இணைந்து பாலக்காடு, புதுநகரம் ஆகிய மீன் மார்க்கெட்டுகளில் ஆய்வு மேற்கொண்டனர். பாலக்காடு நகராட்சி மீன் மார்க்கெட்டில் இருந்து மாதிரி சேகரித்து மொபைல் லேபில் ஆய்வு நடத்தினர். இதில், 95 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
பாலக்காடு மாவட்ட உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகளான ஆர்.ஹேமா, ஜோபின்தம்பி, நயனலட்சுமி, அனீஷ், நகராட்சி சுகாதாரத்தறை ஹெல்த் சூபர்வைசர் மனோஜ், சீனியர் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்பெக்டர் அனில்குமா், ஹெல்த் இன்ஸ்பெக்டர்களான ரெனி, பபிதா, பிஜூ ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.