பாலக்காடு : கேரள பஸ் உரிமையாளர்கள் சங்கம் தலைமையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பாலக்காடு எம்.பி., வி.கே.ஸ்ரீகண்டன் ஸ்டேடியம் தனியார் பஸ்நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். கொச்சியிலுள்ள ஐ.டி நிறுவனத்தின் மூலமாக பாலக்காடு மாவட்டத்தில் 84 தனியார் பஸ்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பஸ் பயணிகளுக்கும், நடத்துனர்களுமிடையே ஏற்படுகின்ற சில்லைரை தட்டுப்பாடு பிரச்னை இது மூலமாக வராது. பயணக்கட்டணம் முறையாக செலுத்தி சுலபமாக பயணிக்கலாம். மே 31ம் தேதிக்குள் மாநிலத்தில் 1000 தனியார் பஸ்களில் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளது என்று பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கோபிநாதன் அறிவித்துள்ளார்.
தொடக்கவிழாவில் மாவட்ட தலைவர் பேபி தலைமைத் தாங்கினார். பாலக்காடு ஆர்.டி.ஓ., ஜேர்சண், ஜெயேஷ்குமார், மூசா, பாபு கிரீஷ்குமார், பிஜூ, வித்யாதரனன், பிரதீப், மணிகண்டனர் ஆகியோர் பங்கேற்றனர்.