*நீர்வள பாசனத்துறை நடவடிக்கை
பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், பெருவெம்பு, பொல்புள்ளி ஆகிய 2 கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை நீர்வள பாசனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு அணை மூலமாக பெரும்வெம்பு, பொல்புள்ளி மற்றும் சித்தூர் – தத்தமங்கலம் நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்வதற்கு உகந்த விதமாக சித்தூர் பாலத்துள்ளி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை அமைக்கப்படுள்ளன.
இந்த தடுப்பு அணை மூலம் 3 உள்ளாட்சி பகுதிகளில் உள்ள விவசாயிகள் விளைச்சல் நிலங்களில் தண்ணீர் சேகரித்து விவசாயம் செய்யவும் வசதி உள்ளது. 1200 ஹெக்டர் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு பயன்படும் விதமாக தடுப்பு அணை 19.84 கோடி ரூபாய் செலவீட்டில் கேரள நீர்வளப்பாசனத்துறை சார்பில் தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது.
1200 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில் 12 மதகுகள் பொருத்தப்பட்டுள்ளது. 5 மீட்டர் அளவில் தண்ணீர் சேகரிக்க முடியும், மதகுகள் திறப்பதற்காக ஜெனரேட்டர் உதவியுடன் திறப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சித்தூர் பாலத்துள்ளி ஆற்று தண்ணீர் மூலமாக விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் தடுப்பு அணை அமைந்துள்ளது.