ஐதராபாத்: உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்தது. வார்னர் 48 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), மிட்செல் மார்ஷ் 31, ஸ்டீவன் ஸ்மித் 27, லாபுஷேன் 40, மேக்ஸ்வெல் 77 ரன் (71 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 48, கேமரான் கிரீன் 50* ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் உசாமா மிர் 2, ஹரிஸ் ராவுப், முகமது வாசிம், ஷதாப் கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 47.4 ஓவரில் 337 ரன் எடுத்து தோற்றது. இப்திகார் அகமது 83 ரன் (85 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் பாபர் ஆஸம் 90 ரன் (59 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்; காயத்தால் ஓய்வு), முகமது நவாஸ் 50 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் லாபுஷேன் 3, கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 2, மேக்ஸ்வெல், அப்பாட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.