பெஷாவர்: பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானை கடந்த 2001ம் ஆண்டு தாலிபன்கள் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்ஒரு பகுதியாக பன்னு, வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இருந்து தாக்குதல் நடத்தினர். இந்த அதிரடி தாக்குதலில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.