பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.







