டெஹ்ரான்: பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணம் லர்கானா நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்கள் ஈராக் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து மத்திய ஈரானின் யாஸ்டில் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த யாத்ரீகர்கள் 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த 23 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.