கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி மாவட்ட சிறையில் நிலநடுக்கத்தை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பினர்.
பாகிஸ்தானில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்டதை அடுத்து பலவீனமான சுவரை இடித்து தள்ளிவிட்டு கைதிகள் சிலர் தப்பினர். நிலநடுக்கத்தை அடுத்து பாதுகாப்புக்காக கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றும்போது போலீஸை தாக்கி சிலர் தப்பினர். ஒட்டுமொத்தமாக சிறை கைதிகள் 216 பேர் தப்பிய நிலையில் சிலரை போலீசார் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நிலநடுக்கத்தை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோட்டம்
0