டெல்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சி.ஆர்.பி.எஃப். வீரர் மோதிராம் ஜாட் என்பவரை கைது செய்தது என்.ஐ.ஏ.. 2023 முதல் பாக். உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார் மோதிராம் ஜாட். பல முறை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து மோதிராம் பணம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மோதிராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூன் 6ம் தேதி வரை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த CRPF வீரரை கைது செய்தது என்.ஐ.ஏ.
0