கராச்சி: பாகிஸ்தானில் இரு வேறு இடங்களில் பேருந்துகளை மடக்கி ஆயுதம் ஏந்திய மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் முசாக்கல் மாவட்டத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தை வழிமறித்த நபர், அதில் இருந்த பயணிகளை கீழே இறங்கும்படி மிரட்டல் விடுத்துள்ளான்.
கீழே வந்த பயணிகளின் அடையாள அட்டையை சோதனை செய்த அவன் 23 பயணிகளை சுட்டுக்கொன்றான். கொல்லப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் தெற்கு பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்தவர்கள். அவர்களது இன பின்னணி காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதேபோல் பலுசிஸ்தானின் குலத் மாவட்டத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேரை ஆயுதம் ஏந்திய மர்ம நபர் சுட்டுக்கொன்றுள்ளான்.