இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமான படை தளபதி ஜாகீர் அகமது பாபர் சித்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாகிஸ்தான் விமான படை தளபதி ஜாகீர் அகமது பாபரின் அமெரிக்க பயணம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பரஸ்பர நலன்களையும் மேலும் மேம்படுத்தும். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை ஜாகீர் அகமது சந்தித்தார். பென்டகனில், இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பரஸ்பர விவகாரங்கள், கூட்டு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான புதிய வழிகளை உருவாக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமான படை தளபதி அமெரிக்கா பயணம்
0