இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 2024 ஜனவரி மாதம் 4வது வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9ம் தேதி நள்ளிரவில் திடீரென்று கலைக்கப்பட்டது. பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்தார்.