இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமான பெண்களை குறிவைத்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாக்.கில் உள்ள பஞ்சாபின் குஷாப் பகுதியில் டிக்டாக் பெண் பிரபலம் ஒருவர் சமீபத்தில் அவரது உறவினரால் கொல்லப்பட்டார். இதேபோல் பிப்ரவரியில், பெஷாவரில் உள்ள அவரது வீட்டில் மற்றொரு பெண் பிரபலம் கொல்லப்பட்டார். அந்த வரிசையில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களை கொண்ட 17 வயது சிறுமி இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் சம்பல் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் 17 வயதான சனா. டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம், டிக்டாக்கில் அவரை 7,40,000 பேரும், இன்ஸ்டாகிராமில் 5,00,00 பேரும் பின்தொடர்கிறார்கள். சனாவின் தந்தை, ஒரு அரசு அதிகாரி, அவரது தாயார் இல்லத்தரசி. அவரது 15 வயது சகோதரருடன் வசித்து வந்தார். அவர் தற்போது கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ராலில் உள்ள அத்தை வீட்டிற்கு சென்று வந்தார். கொலை நடந்த அன்று சனாவும், அவரது அத்தையும் வீட்டில் இருந்தனர். அப்போது சனாவை சந்திக்க வந்த உமர் ஹயாத் என்வர் திடீரென அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.