பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஆடை, அணிகலன்களை விற்பனை செய்யும் வணிக வளாகம் புதிதாத திறக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் பொருட்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பெருமளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.
விளம்பரத்தைப் பார்த்ததும் அதிக தள்ளுபடியைப் பெற ஏராளமான பொதுமக்கள் கடைக்கு விரைந்தனர்.மால் நிர்வாகமும், கடை உரிமையாளர்களும் கூட இதுபோன்ற கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கடை ஊழியர்கள் கடைக்குள் நுழைய மாலுக்கு வெளியே கூடியிருந்த பெருந்திரளான கூட்டத்தைத் தடுக்க தங்களால் இயன்றவரை முயன்றனர். ஆனால் பொதுமக்கள் கண்ணாடி கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.