புதுடெல்லி: இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராணுவ துணைத்தலைமை தளபதி ராகுல் ஆர் சிங் கூறியதாவது: இந்தியா ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா என இரண்டு எதிரிகளை கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் மூன்று எதிரிகள், அதாவது பாகிஸ்தான், சீனா, துருக்கி உள்ளன.
போரில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கியது. பாகிஸ்தானுக்கு அதிக ஆதரவை வழங்குவதில் துருக்கி முக்கியப் பங்கு வகித்தது. அவர்கள் பைரக்தார் உள்ளிட்ட ஏராளமான டிரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கினர். இந்தியா-பாகிஸ்தான் மோதலை சீனா பல்வேறு ஆயுத அமைப்புகளைச் சோதிக்க ஒரு நேரடி ஆய்வகம் போலப் பயன்படுத்தியது. இந்திய ராணுவ நிலைப்பாட்டைக் கண்காணிக்க சீனா தனது செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தியது என்றார்.