லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப்பில் 34 தீவிரவாதிகளை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உளவுத்துறை அடிப்படையிலான தகவல்களின்படி, தீவிரவாத தடுப்பு பிரிவினர் 415 சோதனைகளை நடத்தினர்.
லாகூர், ராவல்பிண்டி, குஜ்ரான்வாலா, ஜீலம், பஹாவல்பூர், சாஹிவால், நரோவல், பக்பட்டான், பஹாவல்நகர், புகாரா, கசூர் மற்றும் நங்கனா சாஹிப் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 34 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5,841 கிராம் வெடிபொருள்கள், 19 டெட்டனேட்டர்கள், 51 அடி நீளமுள்ள பியூஸ் கம்பி, கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.