இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதத்தை ‘சட்டப்பூர்வ போராட்டம்’ என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் கூறி உள்ளார். பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் நடந்த பயிற்சி நிறைவு விழாவில் பேசிய அந்நாட்டின் ராணுவ பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் பேசியதாவது: தீவிரவாதம் என இந்தியா முத்திரை குத்துவது உண்மையில் சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான ஒரு சட்டப்பூர்வ போராட்டம். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அடக்கி, தீர்வு காண்பதற்கு பதிலாக எதிர்ப்பை அடக்கியவர்கள் தங்கள் சொந்த செயல்பாடுகள் மூலம் இயக்க நடவடிக்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர். தங்களின் தேவையை சுயமாக தேர்வு செய்வதற்கான உரிமை போராட்டத்தில் காஷ்மீர் மக்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும். ஐநா தீர்மானங்கள், காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்னைக்கு நியாயமான தீர்வு காண பாகிஸ்தான் வலுவான ஆதரவாளராக இருக்கிறது. நமது அண்டை நாடு எதிர்காலத்தில் ஏதேனும் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி தரப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பாக். ராணுவ தளபதி சொல்கிறார் காஷ்மீரில் தீவிரவாதம் சட்டப்பூர்வ போராட்டம்
0