ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் பலியானார். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் சர்வதேச எல்லைப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லையில் திடீரென அத்துமீறி தாக்குதலை தொடங்கினார்.
இந்திய எல்லை நிலைகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனிடையே பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலில் காயமடைந்த எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலர் லால் பாம் கிமா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த வீரர் மிசோரம் மாநிலத்தின் அய்சால் பகுதியை சேர்ந்தவர்.