கவுகாத்தி: மக்களவை காங்கிரஸ் துணை தலைவரான கவுரவ் கோகாய் மற்றும் அவரது இங்கிலாந்து மனைவி எலிசபெத் ஆகியோருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் பாஜவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கவுரவ் கோகாய், எங்கள் மீதான குற்றச்சாட்டு கூறிய முதல் நாளில் இருந்தே நாங்கள் அது தொடர்பான ஆதாரங்களை கேட்டு வருகிறோம். ஆதாரங்களை வழங்க முடியாதது அவரது பலவீனம். ஆதாரங்களை செப்டம்பர் 10ம் தேதிக்குள் வெளியிடுவதாக முதல்வர் கூறியிருக்கிறார். முன்கூட்டியே வெளியீட்டு தேதியை நிர்ணயம் செய்வதற்கு இது என்ன திரைப்படமா? சிங்கம் 1 அல்லது சிங்கம் 2 ஐ பார்க்கிறோமா? என்று தெரிவித்துள்ளார்.
பாக். உடன் தொடர்பு விவகாரம் ஆதாரங்களை காட்ட இயலாதது அசாம் முதல்வரின் பலவீனம்: காங். எம்பி விமர்சனம்
0