சென்னை: விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் காஷ்மீர் உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஜோடி கரடி வந்தது. காஷ்மீரின் ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து (ஆண், பெண்) ஒரு ஜோடி இமாலயன் கருப்பு கரடி கொண்டு வரப்பட்டது. இதற்கு வண்டலூர் உயிரியல் பூங்கா மாற்றாக, ஒரு இணை வங்கப்புலிகள் வழங்க ஒப்புக்கொண்டது. ஜம்பு பூங்காவில் இருந்து அந்தமான் விரைவு ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு ஒரு இணை கரடிகள் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டன. மேலும் வருகிற 15ம் தேதி அன்று திரும்பும் இதே ரயிலில் இங்கிருந்து ஒரு இணை வங்கப்புலிகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.