திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயில் மேலே கடந்த 28ம் தேதி இரவு 7 மணியளவில் ஒரு ஹெலிகாப்டர் கோயிலின் மேல் தாழ்வாக 5 முறை வட்டமிட்டு பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகக் குழுவின் மத்திய அரசு பிரதிநிதியான கும்மனம் ராஜசேகரன் கோரிக்கை விடுத்தார்.
ஹெலிகாப்டர் பறந்த சம்பவம் குறித்து திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் நாகராஜுவிடம் பத்மநாபசுவாமி கோயில் எஸ்பி அஜித் மோகன் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் நாகராஜு கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்பிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், பத்மநாபசுவாமி கோயில் மேல் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை பறக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.