நெல்லை: நெல்லை வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 300 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரவணராஜ் குடும்பத்திற்கு நிவாரணம் தரவும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை – தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை மறித்து 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.