மூணாறு : மாட்டுப்பட்டி அணை பகுதியில் படையப்பா யானை சுற்றி வருகிறது.கேரள மாநிலம், மூணாறில் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டுயானை மிகவும் பிரபலமானது. இந்த யானை எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது, சாலையோரங்களில் இறங்கி வாகனங்களை விரட்டுவது என அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக தலையாறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை, தற்போது மாட்டுப்பட்டி அணை பகுதியில் நடமாடி வருகிறது. நேற்று மாட்டுப்பட்டி அணை அருகே படையப்பா யானை தண்ணீர் பருக வந்துள்ளது.
அப்போது, அணையில் படகு சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் யானை தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசித்தனர். மேலும், புகைப்படம், வீடியோவாக எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.