அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் 90 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். எளிதில் வேலை கிடைக்கும் என்பதால் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் குடிபெயர்கின்றனர். உலகிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸில்தான் 35 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடத்தில் உள்ளது.