பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பா ரெட்டிபாளையம் ஊராட்சியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த மாதம் பூமி பூஜை செய்து பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பணிகளை தொடக்கி வைத்தார். இந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதால் நேற்று ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் தொடங்கியுள்ளாதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாவட்டச் செயலாளர் கொண்டக்கரை ஜெயபிரகாஷ், ஊராட்சிமன்ற தலைவர் சதாசிவம், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேம்பாலப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு
0