சென்னை: சென்னையில் வலம் வரும் பெண்களுக்கான ‘ஷி டாய்லெட்’டை தூய்மையாக பராமரிப்பது நமது பொறுப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கேரவேனுக்கு நிகராக, சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் புதுவரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கான கழிவறை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் இவை வலம் வரத் தொடங்கியுள்ளன.
இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஷி டாய்லெட்’ எனும் இந்த பாராட்டத்தக்க முன்னெடுப்பை தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு. அதனை உறுதிசெய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.