கூடுவாஞ்சேரி: ஓட்டேரி அரசு மேல்நிலை பள்ளியில் 144 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சியில், வண்டலூர், ஓட்டேரி மற்றும் ஓட்டேரி விரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்நிலையில், ஓட்டேரியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு 144 மாணவ, மாணவிகளுக்கு இலவச செய்திகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், திமுக பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.