சென்னை: ஒட்டன்சத்திரத்தில் கார் ஓட்டுநர் கொலை வழக்கில் 2 மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகி நடராஜ் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சேர்ந்தவர் நடராஜன் இவர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
மேலும் இவர் நெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கார் ஓட்டுநராக அம்பிளிக்கை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். நெய் வியாபாரத்தில் வரும் ரூ .6 லட்சத்தை சுரேஷ்குமார் கையாடல் செய்து தலைமறைவாகிவிட்டார். இது சம்மந்தமாக சுரேஷ்குமாரை நடராஜன் ஆதரவாளர்களும், அவரது உறவினர்களும் தேடிவந்தனர்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட்.17ல் அடித்து கொல்லப்பட்டு அம்பிளிக்கை மயானத்தில் உடல் எரிக்கப்பட்டது. இந்நிலையில் இறந்து போன சுரேஷின் உறவினர் வடிவேல், மனோகரன், பாண்டி, சிவஞானம், சதீஷ்குமார், முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதிமுக நிர்வாகி நடராஜ் தூண்டுதலின் பேரில் சுரேஷை கொலை செய்ததாக கைதான வடிவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.