தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டார். கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்ததிலும் உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதத்தாலும் கொலை என தகவல் வெளியாகி உள்ளது. கொல்லம்பரம்பு ஊராட்சித் தலைவராக பதவி வகித்திருந்த முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். முத்து பாலகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை!!
0