தஞ்சாவூர் : தஞ்சை கிழக்கு, மேற்கு, தெற்கு போலீஸ் நிலையங்கள், மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையங்கள் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்கள், மயங்கி விழுந்தவர்கள் என அடையாளம் தெரியாதவர்கள், ஆதரவற்றோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாலையோரங்களில் அனாதையாக இறந்து கிடந்தவர்களின் உடல்களும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் அடையாளம் தெரியாத சடலங்கள், ஆதரவற்றோர் சடலங்கள் என 20 பிணங்கள் கடந்த சிலமாதங்களாக உள்ளன.
இவர்களின் உடல்களை உரிமைகோரி பெற யாரும் முன்வரவில்லை.இந்த உடல்களுக்கு உரிமை கோராவிட்டால் இந்த வாரத்தில் அடக்கம் செய்யப்படும் என போலீஸ் தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை. இதனால் இந்த உடல்களை போலீசாரே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் எத்தனை உடல்கள் பிணவறையில் அனாதையாக இருக்கிறது என்ற விவரத்தை தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசாருக்கு எழுதியுள்ளனர். அவர்கள் முறைப்படி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி, 20 சடலங்களையும் நேற்று இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
இதுயடுத்து தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள ராஜகோரி இடுகாட்டில் மாவட்ட காவல்கண் காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் 13 ஆண் சடலம் மற்றும் 7 பெண் சரணம் என மொத்தம் 20 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.