சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது. 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்து ஒரு சவரன் ரூ44,320க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ80 உயர்ந்து ஒரு பவுன் ரூ44,400க்கும் விற்கப்பட்டது.
தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ560 உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ5,550க்கும், பவுன் ரூ44,400க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ20 குறைந்து ஒரு கிராம் ரூ5,530க்கும், பவுனுக்கு ரூ160 குறைந்து ஒரு பவுன் ரூ44,240க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79-க்கு விற்பனையாகிறது.