மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புளிக்குளத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (57). விவசாய கூலித்தொலாளி. இவர், கடந்த 28ம் தேதி இரவு கீழக்கண்டனி அருகே டூவீலரில் சென்ற போது சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி மூளைச்சாவு அடைந்ததார். இதையடுத்து செல்லப்பாண்டியின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் செல்லப்பாண்டியின் உடல் சொந்த ஊரான புளிக்குளத்தில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.