பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலியான சம்பவத்தில் விரிவான அறிக்கை அளிக்க அணையிடப்பட்டுள்ளது. திருப்பூர் ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு. குள்ளாய்பாளையத்தில் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து நாகராஜ், ஆனந்தி உயிரிழந்தனர். தம்பதியின் மகள் படுகாயம் அடைந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.