Sunday, March 3, 2024
Home » உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாடும் வகையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலையில் டிச.31 இரவில் வாகன போக்குவரத்துக்கு தடை: சென்னை மாநகர காவல்துறை அதிரடி

உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாடும் வகையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலையில் டிச.31 இரவில் வாகன போக்குவரத்துக்கு தடை: சென்னை மாநகர காவல்துறை அதிரடி

by Ranjith

சோழிங்கநல்லூர்: 2024 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சென்னை மாநகர காவல்துறை ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டிற்கு முன்னாள்’ என்ற தலைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி டிச.31ம் தேதி இரவு மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காமராஜர் சாலை மற்றும் எலியட்ஸ் கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் வருமாறு:

* கடற்கரை உட்புற சாலை 31ம்தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

* காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31ம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

* அடையாறில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே.மட் ரோடு, லஸ், மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.

* ஆர்.கே.சாலை- காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள், வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலை சென்றடையலாம்.

* பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக செல்லலாம்.

* வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்), பாரதி சாலை, விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை, நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரை போக்குவரத்து அனுமதி இல்லை.

* தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரை முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து ரத்து.

* ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து ரத்து.

* அடையாரிலிந்து பாரிஸ் செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கத்தீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக செல்லலாம்.

* பாரிஸிலிருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஆர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு , என்.எப்.எஸ் ரோடு, முத்துசாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கத்தீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலை வழியாக செல்லலாம்.

* அனைத்து மேம்பாலங்களும் 31ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மூடப்படும்.

காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்கள்:

* சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை வரை – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

* வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

* பாரதி சாலை (விக்டோரியா ஓட்டல் சாலை, பாரதி சாலை சந்திப்பில் – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை.

* டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

* லாயிட்ஸ் சாலை (நடேசன் சாலையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் அருகில் இருந்து – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

* ராணி மேரி கல்லூரி வளாகம்.

எலியட்ஸ் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

* 31ம் தேதி இரவு 8 மணிக்கு பிறகு 6வது அவென்யூ நோக்கி மறுநாள் காலை 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

* 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

எலியட்ஸ் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தங்கள்:

* பெசன்ட் நகர் 4வது அவென்யூ, பெசன்ட் நகர் 3வது மெயின் ரோடு, 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூ, 2 வது அவென்யூ, 3வது அவென்யூ- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்.

You may also like

Leave a Comment

1 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi