சென்னை: நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை பேசியதால் சொற்பொழிவாளர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என ஆசிரியர் சங்கர் தெரிவித்துள்ளார். முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத் திறனாளியாக, ஏழையாக பிறக்கின்றனர் என பேசியது காயப்படுத்தியது. நடைமுறைக்கு ஒவ்வாத விசயங்களை மகாவிஷ்ணு பேசியது தனக்கு பிடிக்கவில்லை, பேச வேண்டாம் என்றேன். மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தையே மகாவிஷ்ணு கேவலப்படுத்தி பேசினார் என்று ஆசிரியர் கூறினார்.