கடலூர்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கடலூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.