தேவையானவை:
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்,
கேரட் – 1 வேகவைத்து அரைத்தது,
பனங்கற்கண்டு – 4 டேபிள் ஸ்பூன்,
அகர்/அகர் சைனா கிராஸ் – 5 கிராம்,
ஆரஞ்சு, வெனிலா எசன்ஸ் – தேவையான அளவு.
செய்முறை:
அகர் சைனா கிராசை அரை கப் நீரில் சற்று நேரம் ஊற வைத்து பின் கொதிக்க வைத்தால் சைனா கிராஸ் கரைந்து விடும். பின்னர் வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி கேரட் விழுது, ஆரஞ்சு ஜூஸ், எசன்ஸ் சேர்த்து கலந்து ஜெல்லி மோட்டில் அல்லது சிறிய கிண்ணங்களில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.