சென்னை: அதிமுக முன்னாள் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர்அண்ணாவின் 115வது பிறந்த நாளான செப்.15ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.