அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி மாவட்ட நீர் வளத்துறையின்கீழ், கோதையாறு பாசனத் திட்ட அணையிலிருந்து ராதாபுரம் விவசாய பாசனத்திற்கு, அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட நிலப்பாறை – திருமூலநகர் கால்வாயில் இருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஷட்டர்களை திறந்து வைத்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், ஓ. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் புகார் மனு அளித்தால் அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும், சட்டப்பேரவை விதியின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஓபிஎஸ் மீது நடவடிக்கையா? சபாநாயகர் அப்பாவு பேட்டி
0