Friday, April 12, 2024
Home » ஓபிஎஸ் விரைவில் முக்கிய அறிவிப்பு?

ஓபிஎஸ் விரைவில் முக்கிய அறிவிப்பு?

by Karthik Yash

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை குடும்பத்தினருடன் வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் குடும்பத்தினரோடு ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் யானைக்கு பழங்கள் கொடுத்தார். பின்னர் திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலான வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தார். ஓபிஎஸ் மனைவி இறந்து நேற்று முன்தினத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்தது.

இதையடுத்து ஆண்டாள் கோயிலுக்கும், குலதெய்வம் கோயிலுக்கும் ஓபிஎஸ் சென்று வழிபட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஓபிஎஸ் உடன் இளைய மகன் ஜெயபிரதீப், ஓபிஎஸ் தம்பி ராஜா மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவருடைய மூத்த மகன் எம்.பி ரவீந்திரநாத் வரவில்லை. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஓபிஎஸ் எப்போதும் குலதெய்வம் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த பின்னர் முக்கிய முடிவுகளை எடுப்பதும், அறிவிப்பதும் வழக்கம். அந்த வகையில் குடும்பத்தினருடன் குலதெய்வ கோயிலில் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்துள்ளதால் விரைவில் முக்கிய முடிவுகளை எடுப்பார்’’ என்றனர்.

* ஒரு தொகுதிக்கு 2 வேட்பாளர்கள் வேற லெவல்…
ஓபிஎஸ் அணி கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பில் சேலம் தொகுதி வேட்பாளராக ஜெய்சங்கர், எடப்பாடி முருகேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் கவுரவ ஆசிரியராக இருக்கும் நாளிதழ் ஒன்று வெளியிட்டு அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi