சென்னை : அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்து இருந்த மனு மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் தன்னை அங்கீகரித்த நிலையில் ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளர் என கூறுவது தேவையற்ற குழப்பத்தை தருவதாக அந்த மனுவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.