டெல்லி: ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்க விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ரவீந்திரநாத் தன்னுடைய சொத்து விவரங்களை முழுமையாக வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. ரவீந்திரநாத் சொத்து விவரங்கள் குறித்து முழுமையாக தனியாக விசாரிக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தரப்பு தெரிவித்தனர். ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது