டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 3-ம் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் இன்றுவரை முடங்கியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது.