பெங்களூரு: எதிர்க்கட்சிகள் எல்லாம் நாட்டு நலனுக்காக ஓரணியில் திரண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே இலக்கு எனவும் அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாகவே, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.